சாவோ லூயிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவோ லூயிசு
மேலே, இடதிலிருந்து வலதாக: சோவோ லூயிசு நகரமும் லகுனா யான்செனும்; நடுவில்: அவெனிடா கொலரெசு மோரீரா; கீழே, இட வலமாக: கடலோர நெடுஞ்சாலைக்கான நுழைவாயிலும் கடலோர நெடுஞ்சாலையின் இரவுக் காட்சியும்.
மேலே, இடதிலிருந்து வலதாக: சோவோ லூயிசு நகரமும் லகுனா யான்செனும்; நடுவில்: அவெனிடா கொலரெசு மோரீரா; கீழே, இட வலமாக: கடலோர நெடுஞ்சாலைக்கான நுழைவாயிலும் கடலோர நெடுஞ்சாலையின் இரவுக் காட்சியும்.
சாவோ லூயிசு டொ  மாரன்யோநகராட்சி-ன் சின்னம்
கொடி
Coat of arms of சாவோ லூயிசு டொ  மாரன்யோநகராட்சி
Coat of arms
சாவோ லூயிசு அமைவிடம்
சாவோ லூயிசு அமைவிடம்
சாவோ லூயிசு is located in Brazil
{{{alt}}}
சாவோ லூயிசு
பிரேசிலில் அமைவிடம்
அமைவு: 2°31′42″S 44°18′16″W / 2.52833°S 44.30444°W / -2.52833; -44.30444
நாடு  Brazil
மண்டலம் வடகிழக்கு மண்டலம்
மாநிலம் Bandeira do Maranhão.svg மாரன்யோ
நிறுவியது செப்டம்பர் 8, 1612
அரசு
 - நகரத்தந்தை எடிவால்டோ ஓலந்தா ஜூனியர்
பரப்பளவு
 - நகராட்சி 827.141 கிமீ²  (319.360 ச. மைல்)
ஏற்றம் மீ (12 அடி)
மக்கள் தொகை (2010 IBGE)
 - நகராட்சி 10,11,943
 - அடர்த்தி 1,183.4/கிமீ² (3,064.9/சதுர மைல்)
 - மாநகரம் 12,27,659
நேர வலயம் UTC-3 (ஒ.ச.நே.-3)
அஞ்சல் குறியீடு 65000-000
தொலைபேசி குறியீடு(கள்) +55 98
இணையத்தளம்: சாவோ லூயிசு, மாரன்யோ

சாவோ லூயிசு (São Luís, ஆங்கிலம்: Saint Louis) பிரேசிலிய மாநிலம் மாரன்யோவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம்சாவோ மார்கோசு விரிகுடாவில் உள்ள சாவோ லூயிசு தீவில் அமைந்துள்ளது. நகரத்தின் மக்கள்தொகை 2008இல் 986,826 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஆக உள்ளது. இது பிரேசிலில் 16வது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது.

சாவோ லூயிசு நகரத்தை பிரான்சு நிறுவியது. பிரேசிலில் தீவுகளில் அமைந்துள்ள மூன்று நகரங்களில் ஒன்றாக சாவோ லூயிசு விளங்குகிறது. இந்த நகரத்தில் இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ளன: மதீரா துறைமுகம், இட்டாகுயி துறைமுகம். இவற்றின் வழியாக பிரேசிலின் அமேசானில் கிடைக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள முதன்மையான தொழிலாக மாழை தொழிலகங்கள் (ஆலுமார், வேல்) இயங்குகின்றன. மாரன்யோ கூட்டரசு பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

இங்கு குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் பிரான்சியர் ஆவர். 1612இல் பிரான்சு இதனை தங்கள் குடியேற்றத்திற்கான மையமாக்க திட்டமிட்டிருந்தனர். இங்கு தங்கள் அரசர் மற்றும் அவரது புனித மூதாதையின் நினைவாக செயின்ட் லூயி என்ற கோட்டையை கட்டினர். இந்த நகரத்தை 1615இல் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இதற்கு சாவோ லூயிசு எனப் பெயர்மாற்றம் செய்தனர்.

சாவோ லூயிசின் மூதாதைகளின் பாலிலாப் பண்பணுப் பாரம்பரிய டி. என். ஏ. ஆய்வின்படி, 42% ஐரோப்பியர்கள், 39% உள்நாட்டு அமெரிக்கர் மற்றும் 19% ஆபிரிக்கர் ஆகும்.[1]

சாவோ லூயிசை அழைக்க உள்ளூர் பகுதிக்கான தொலைபேசிக் குறியீடு (பிரேசிலில் இது டிடிடி எனப்படுகிறது) 98 (DDD98) ஆகும்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

சாவோ லூயிசு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


ஆள்கூறுகள்: 2°31′42″S 44°18′16″W / 2.5283°S 44.3044°W / -2.5283; -44.3044

மேற்சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_லூயிசு&oldid=1683936" இருந்து மீள்விக்கப்பட்டது