டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் தீவுக்கூட்டம்
Native name: ஆர்கிபெலாகோ டி டிரின்டேடு எ மார்ட்டிம் வாசு
டிரின்டேடு தீவின் பாறை ஓங்கல்கள்
டிரின்டேடு தீவின் பாறை ஓங்கல்கள்
புவியியல்
Location Trindade and Martim Vaz Archipelago.png
அமைவு அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள் 20°31′30″S 29°19′30″W / -20.525, -29.325அமைவு: 20°31′30″S 29°19′30″W / -20.525, -29.325
தீவுக்கூட்டம் ஆர்கிபெலாகோ டி டிரின்டேடு எ மார்ட்டிம் வாசு
தீவுகளின் எண்ணிக்கை 5
முக்கிய தீவுகள் டிரின்டேடு; மார்ட்டிம் வாசு
உயர் புள்ளி பைக்கோ டோ டெசெயாடோ[1]
ஆட்சி
பிரேசிலின் கொடி பிரேசில்
மண்டலம் தென்கிழக்கு
மாநிலம் இசுபிரிட்டோ சான்டோ
நிர்வாகம் பிரேசிலிய கடற்படை
இனம்
மக்கள் தொகை 32 (2009)

டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் (Trindade and Martim Vaz)அத்திலாந்திக்குப் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவுக்கூட்டம் ஆகும். இது தெற்கு பிரேசிலின் இசுபிரிட்டோ சான்டோ மாநிலத்தைச் சேர்ந்தது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10.4 கிமீ² (4.0 ச மை) ஆகவும் மக்கள்தொகை 32 (பிரேசிலிய கடற்படையினர்) ஆகவும் உள்ளது. இந்தத் தீவுக்கூட்டத்தில் ஐந்து தீவுகளும் பல பாறைத்திட்டுகளும் உள்ளன. 10.1 கிமீ² (3.9 ச மை) பரப்பளவுள்ள டிரின்டேடு மிகப்பெரிய தீவாகும். இதற்கு கிழக்கே 49 கிமீ (30 மைல்கள்) தொலைவில் 0.3 கிமீ² (30 எக்டேர்கள்) பரப்பளவுள்ள சிறிய மார்ட்டிம் தீவு உள்ளது.

இந்த தீவுகள் எரிமலையிலிருந்து உருவானவை;மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. தென் டிரின்டேடைத் தவிர பெரும்பாலும் வெற்றிடமாகக் காணப்படுகிறது. இந்தத் தீவுகளை 1502இல் போர்த்துக்கேய தேடலாய்வாளர் எசுடேவாயோ ட காமா கண்டறிந்தார். 1890 முதல் 1896 வரை இதனை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியிருந்தது; பின்னர் பிரேசிலுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக திருப்பியளிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் கையகப்படுத்திய காலத்தில் இது "தெற்கு டிரினிடாடு" என அழைக்கப்பட்டு வந்தது.

மேற்சான்றுகள்[தொகு]