உலக வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலக வங்கி

உலக வங்கி சின்னம்
உலக வங்கி சின்னம்

தோற்றுவிக்கப்பட்ட நாள் சூலை 1944
வகை பன்னாட்டு அமைப்பு
இடம் வாசிங்டன் டிசி
அங்கத்துவம் 187 நாடுகள்
தலைவர் ராபர்ட் பி. சோல்லிக்
இணையத்தளம் worldbank.org

உலக வங்கி (World Bank) வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.[1]. உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.[2]

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[3] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)


உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலை நகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.


தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

பொருளடக்கம்

[தொகு] உலக வங்கி நிர்வாகம்

இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம். இதன் செயல்பாடுகள் பலதரபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. "About Us". World Bank (2008-10-14). பார்த்த நாள் 2008-11-09.
  2. "About Us". World Bank (2010-09-03). பார்த்த நாள் 2010-09-03.
  3. "About The World Bank (FAQs)". World Bank. பார்த்த நாள் 2007-10-07.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வங்கி&oldid=1106797" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்