இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அடிப்படைக்கடமைகள் என பின்வருவனவற்றை என, பகுதி 4 அ-இல் கூறுகிறது.இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில, இரசிய அரசியலமைப்பினைப் பார்த்து சேர்க்கப்பட்டது.

  1. தேசியக்கொடியையும்,தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
  2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேண வேண்டும்.
  3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
  4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
  5. அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
  6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
  7. காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
  8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
  9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
  10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தர வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

https://en.wikisource.org/wiki/Constitution_of_India/Part_IVA http://www.constitution.org/cons/india/p4a51a.html

வெளி இணைப்புகள்[தொகு]

http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss(8).pdf பரணிடப்பட்டது 2015-07-14 at the வந்தவழி இயந்திரம்