இந்தியாவின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியப் பொருளாதாரம்
தரவரிசை 9th (nominal) / 4வது (PPP)
நாணயம் 1 இந்திய ரூபாய் (INR) (Indian Rupee symbol.svg) = 100 பைசா
நிதி ஆண்டு 1 ஏப்ரல் – 31 மார்ச்
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் உலக வணிக அமைப்பு, SAFTA, ஜி-20 மற்றும் ஏனைய அமைப்புகள்
புள்ளி விவரம்
மொ.உ.உ $1.70 ட்ரில்லியன் (nominal: 9வது; 2010)[1]
$4.45 ட்ரில்லியன் (PPP: 4வது; 2010)[1]
மொ.உ.உ வளர்ச்சி 8.5% (2010–11)
நபர்வரி மொ.உ.உ $1,382 (nominal: 138வது; 2010)[1]
$3,608 (PPP: 129வது; 2010)[1]
துறைவாரியாக மொ.உ.உ services (55.2%), industry (26.3%), agriculture (18.5%) (2010 est.)
பணவீக்கம் (நு.வி.கு) 9.72% (செப்டம்பர் 2011)[2]
வறுமைக்கோட்டுக்கு
கீழ் உள்ள மக்கள்
37% (2010)[3]}
கினி குறியீடு 36.8 (உலக நாடுகளின் பட்டியல்)
தொழிலாளர் எண்ணிக்கை 478 மில்லியன் (2வது; 2010)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை விவசாயம் (52%), தொழில்துறை (14%), சேவை (34%) (2009 est.)
வேலையின்மை 9.4% (2009–10)[4]
முக்கிய தொழில்துறை telecommunications, textiles, chemicals, food processing, steel, transportation equipment, cement, mining, petroleum, machinery, software, pharmaceuticals
தொழில் செய்யும் வசதிக் குறியீடு 134th[5] (2011)
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி $225.4 பில்லியன் (2010 est.)
ஏற்றுமதிப் பொருட்கள் பெட்ரோலியப் பொருட்கள், precious stones, machinery, iron and steel, chemicals, வாகனங்கள், ஆடைகள்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் அமீரகம் 12.5%, ஐக்கிய அமெரிக்கா 11.1%, சீனா 6.1%, ஹொங்கொங் 4.2%, சிங்கப்பூர் 4.1% (2009)
இறக்குமதி $359 பில்லியன் (2010 est.)
இறக்குமதிப் பொருட்கள் கச்சா எண்ணெய், விலையுயர்ந்த கற்கள், machinery, உரங்கள், iron and steel, வேதிப்பொருட்கள்
முக்கிய இறக்குமதி உறவுகள் சீனா 11.2%, US 6.5%, UAE 6%, சவூதி அரேபியா 5.7%, ஆத்திரேலியா 4.2%, ஜெர்மனி 4.2%, ஈரான் 4.1% (2009)
வெளிநாட்டு நேரடி முதலீடு $35.6 பில்லியன் (2009–10)
மொத்த வெளிக்கடன் $238 பில்லியன் (31 திசம்பர் 2010 est.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன் 71.84% of GDP (2010 est.)[6]
வருவாய் $185.4 பில்லியன் (2010 est.)
செலவினங்கள் $269.8 பில்லியன் (2010 est.)
பொருளாதார உதவி $2.107 பில்லியன் (2008)[7]
கடன் மதிப்பீடு BBB- (Domestic)
BBB- (Foreign)
BBB+ (T&C Assessment)
Outlook: Stable
(இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[8]
அந்நியச் செலாவணி கையிருப்பு $319 பில்லியன் (சூலை 2011)[9]

Main data source: CIA World Fact Book
All values, unless otherwise stated, are in US dollars

இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இந்தியப்பொருளாதாரமானது விவசாயம், கைவினைப்பொருட்கள், தொழில்துறை, மற்றும் சேவைத்துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது. சேவைத்துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

இந்தியாவின் பொருளாதார வரலாறானது மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன: காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலகட்டம்(இது 17-ஆம் நூற்றாண்டு வரை), காலனி ஆதிக்க காலகட்டம்(17-ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரை), மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம்(1947 முதல் தற்போது வரை).

அரசாங்கத்தின் பங்கு [தொகு]

திட்டமிடல் [தொகு]

இந்திய அரசு சுதந்திரததிற்குப்பிறகு பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதறகாக ஐந்தாண்டுத்திட்டங்களைத் தீட்டியது. இது திட்டக்குழுவினால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரே திட்டக்குழுவின் தலைவராவார்.

நாணய முறை [தொகு]

இந்தியாவில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் ரூபாய் ஆகும். நூறு பைசாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும்.

காரணிகள் [தொகு]

மக்கள்தொகைப்பரம்பல் [தொகு]

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும். இது உலகிலேயே இரண்டாவது மக்கள்தொகை மிகுந்த நாடாகும். உலகின் மக்கள்தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

புவியியலும் இயற்கைவளங்களும் [தொகு]

இந்தியா பலவேறுபட்ட நிலப்பரப்புகளைக்கொண்டுள்ளது. மலைத்தொடர்கள் முதல் பாலைவனம் வரை இந்தியாவில் உள்ளன. வெப்பநிலை மிகக்குளிர் முதல் கடும் வெப்பம் வரை நிலவுகிறது. இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 1100 மி.மீ. மழையைப் பெறுகிறது. பாசனத்திற்காக 92% நீரானது பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பலவகையான தாதுக்கள் கிடைக்கின்றன. நிலக்கரி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் இரும்புத்தாது, மைக்கா, மாங்கனீசு, டைட்டானியம், தோரியம், வைரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்றவையும் கிடைக்கின்றன.

உள்கட்டமைப்பு [தொகு]

===அரசியல்

துறைகள் [தொகு]

விவசாயம் [தொகு]

1999- 2000 - ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளான காடு வளர்த்தல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல் போன்றவற்றின் மூலமே பெறப்பட்டது. மேலும் வேலைவாய்ப்பில் 57 சதவீதத்தினை இத்துறையே வழங்கியது. பசுமைப்புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளில் உற்பத்தித்திறன் நன்கு அதிகரித்துள்ளது. எனினும் உலகத்தரத்துடன் ஒப்பிடும்போது இது 30 லிருந்து 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. கல்வியறிவின்மை, சீரற்ற பருவமழை, குறுநிலங்கள், போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமை போன்றவை இதற்கு காரணங்களாக விளங்குகின்றன.

தொழில்துறை [தொகு]

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தொழில்துறையின் பங்கு 28.4 சதவீதமாகும். 17 சதவீதம் பேருக்கு இது வேலைவாய்ப்பளிக்கிறது. 1991-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகின்றன.

சேவைத்துறை [தொகு]

சேவைத்துறையானது தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1950-ல் 15%-லிருந்து தற்போது 2000-ல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

நிதி மற்றும் வங்கித்துறை [தொகு]

5454

சமூக-பொருளாதார விளைவுகள் [தொகு]

வெளிநாட்டு வணிகமும் முதலீடும் [தொகு]

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

குறிப்புகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named IMF_GDP
  2. "Index Numbers of Wholesale Prices in இந்தியா". Ministry of Commerce and Industry, Government of இந்தியா. பார்த்த நாள் 2011-03-18.
  3. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named NewPoverty
  4. "Report on Employment & Unemployment Survey (2009–10)". Bureau of Labor Statistics, indian Government (8 அக்டோபர் 2010). பார்த்த நாள் 2011-01-17.
  5. "Doing Business in இந்தியா 2010". உலக வங்கி. பார்த்த நாள் 2010-08-20.
  6. Public debt, IMF, accessed on 29 ஏப்ரல் 2011.
  7. "Net official development assistance received (current US$)". World Bank. பார்த்த நாள் 2011-03-19.
  8. "Sovereigns rating list". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. பார்த்த நாள் 26 மே 2011.
  9. "International Reserves and Foreign Currency Liquidity – இந்தியா". International Monetary Fund (18 மே 2011). பார்த்த நாள் 31 மே 2011.



வெளி இணைப்புகள் [தொகு]