மகபூப்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகபூப்நகர்ர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு, உருது, மற்றும் இந்தி ஆகும். இது பலமூர் எனவும் அழைக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,513,934 ஆகும். இம்மாவட்டம் முன்பு நிஜாம்களின் ஆட்சியில் இருந்தது. நிஜாம் ஆட்சியின்போது இது ஹைதராபாத் மாநிலத்தின் தென்மாவட்டமாக இருந்தது. தெற்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. நல்கொண்டா, ஹைதராபாத், கர்னூல் மற்றும் ராய்ச்சூர், குல்பர்கா ஆகியவை இதன் அண்டை மாவட்டங்கள் ஆகும்.

வரலாறு[தொகு]

முற்காலத்தில் இப்பகுதியானது "ருக்மம்மாபேட்டை" எனவும் "பலமூரு" எனவும் அழைக்கப்பட்டது. இதன் பெயர் ஆனது 1890 டிசம்பர் 4-இல் அப்போது நிஜாமாக இருந்த மகபூப் அலி கான் என்பவரின் நினைவாக மகபூப் நகர் என்று பெயரிடப்பட்டது. முன்பொரு காலத்தில் இது சோழர்களின் நிலம் எனப்பொருள்படும் சோழவாடி என அழைக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகபூப்நகர்&oldid=1683807" இருந்து மீள்விக்கப்பட்டது