பனங்காடை
| பனங்காடை | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்தியாவின் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் ஒரு பனங்காடை
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Coracias benghalensis (லின்னேயஸ், 1758) |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Corvus benghalensis |
பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்[2].இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
பொருளடக்கம் |
வாழிடம் [தொகு]
விளைநிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகள் ஆகியவையை இவற்றின் முதன்மையான வாழிடம். எனினும் இவற்றை நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் மீது அமர்ந்திருக்கக் காணலாம்.
இயல்புகள் [தொகு]
இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும். இவற்றின் ஒலி காக்கை கரைவது போல் இருக்கும்.
இந்தியப் பண்பாட்டில் பனங்காடை [தொகு]
இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு[3].
முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ BirdLife International (2008). Coracias benghalensis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 04 July 2009.
- ↑ பக்கம் 79, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
- ↑ பக்கம் 80, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
- ↑ பக்கம் 80, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்