பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா

பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (Abhay Charanaravinda Bhaktivedanta Swami Prabhupada, சமசுக்கிருதம்: अभयचरणारविन्द भक्तिवेदान्त स्वामीप्रभुपाद, வங்காள மொழி: অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাদ, செப்டம்பர் 1, 1896 - நவம்பர் 14, 1977) இந்தியாவில், கொல்கத்தா நகரில் தோன்றினார். 1922 இல் தமது குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரசுவதி கோசுவாமியை கொல்கத்தா நகரில் சந்தித்தார். இவர் பிரபல மத ஞானியும், அறுபத்து நான்கு கௌடிய மடம் என்றறியப்படும் வைதீக நிறுவனங்களை (சென்னை உட்பட) நிறுவியவருமான பக்தி சித்தாந்த ஸரஸ்வதிக்கு, கற்றறிந்த இந்த இளைஞர் மிகவும் பிரியமானவரானார். வேத ஞானத்தை பிரச்சாரம் செய்வதற்க்காய் தமது வாழ்வை அர்பணம் செய்ய இவரை ஒத்துக் கொள்ளச் செய்தார் குருதேவர். இவ்வாறு குருதேவரது மாணவனான ஸ்ரீல பிரபுபாதா, 1933'ல் (பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு) அலகாபாத் நகரில் அவரது தீட்சை பெற்ற சீடரானார்.

1922'ம் ஆண்டு அவர்களது முதல் சந்திப்பில், ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி ஆங்கில மொழியில் வேத ஞானத்தைப் பரப்பும்படி ஸ்ரீல பிரபுபாதாவை வேண்டினார். தொடர்ந்த வருடங்களில், ஸ்ரீல பிரபுபாதா பகவத் கீதைக்கு ஆங்கிலத்தில் ஒரு கருத்துரை நூலை எழுதவும், கௌடிய மடத்தின் இயக்கங்களில் உதவி செய்யவும் செய்ததோடு 1944'ல் யாருடைய உதவியுமின்றி ஆங்கில (மாத மிருமுறை) பத்திரிக்கையொன்றைத் துவக்கி, கையெழுத்துப் பிரதிகளை டைப் செய்வது, புருஃப் சரி பார்ப்பது மற்றும் எடிட்டிங் முதலானவைகளையெல்லாம் தாமே செய்தார். தாமே ஒவ்வொரு பிரதியையும் விநியோகம் செய்து வெளியீட்டை எவ்வாறேனும் நடத்திச் செல்ல மிகவும் பாடுபட்டார். அன்று துவங்கிய பத்திரிக்கை நிற்கவேயில்லை. அவரது சீடர்களால் தொடரப்படும் இப்பணியால் இப்பத்திரிக்கை இன்று பத்தொன்பது மொழிகளில் வருகின்றது.



சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்