கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
ஒரிஸா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒடிசா (Odisha) ) பழைய பெயர் ஒரிசா (Orissa), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். (ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்[1][2]. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டக், கோணார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா[3]. ஒடிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.
[தொகு] மக்கள்
சமயவாரியாக மக்கள் தொகை [4]
| சமயம் |
பின்பற்றுவோர் |
விழுக்காடு |
| மொத்தம் |
36,804,660 |
100% |
| இந்துகள் |
34,726,129 |
94.35% |
| இசுலாமியர் |
761,985 |
2.07% |
| கிறித்தவர் |
897,861 |
2.44% |
| சீக்கியர் |
17,492 |
0.05% |
| பௌத்தர் |
9,863 |
0.03% |
| சமணர் |
9,154 |
0.02% |
| ஏனைய |
361,981 |
0.98% |
| குறிப்பிடாதோர் |
20,195 |
0.05% |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு
- ↑ குடியரசு தலைவர் ஒப்புதல்
- ↑ ஒரியா ஒடியா என மாற்றம்
- ↑ Census of india , 2001