சைதன்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வங்காள மாநிலத்தில் பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. "சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவன் திருவடிகளை அடையலாம்” என்றார்.

சைதன்ய மகாபிரபு தினமும் அதிகாலையில் புரி ஜகந்நாதரின் தரிசனத்திற்குப் புறப்படுவார். நாட்டிய மந்திரின் கிழக்கே உள்ள கருடஸ்தம்பத்தின் அருகில் மேற்கு நோக்கி நிற்கும் ஜகந்நாதரின் திருவுருவைத் தாகம் மிக்க சாதகப் பறவை போல உற்று நோக்கித் தரிசனம் செய்வார். கோயில் உள்ளே நுழைந்த உடனேயே அவரது மனம் அகமுகமாக ஆழ்ந்துவிடும். புறவுணர்வை இழந்த தன்மயமான அவரது சித்தம் ஜகந்நாதரின் பாத கமலங்களில் லயித்துவிடும். கருட ஸ்தம்பத்தைப் பிடித்தவாறு நின்று கொண்டிருப்பார். கண்களிலிருந்து பரமானந்தப் பெருக்கின் காரணமாகப் பக்திக் கண்ணீர் வழிந்தோட ஜகந்நாதருடன் ஐக்கியமாகிச் சிலையாக நிற்பார். அபிஷேகம், பூஜை ஆகியவற்றுக்குப் பின் பாடப்படும் ஆரதி ஒலி கேட்ட பிறகே அவர் புற உணர்வை அடைவார். ஜகந்நாதரை வணங்கித் தம் குடிலுக்குத் திரும்புவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://srkvijayam.com/2014/04/29/சைதன்ய-மகாபிரபு/

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைதன்யர்&oldid=1665913" இருந்து மீள்விக்கப்பட்டது