கரிபோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரிபோலி
 நாடுகள்: இந்தியா 
பகுதி: வட இந்தியா
 பேசுபவர்கள்: 180 மில்லியன் (1991)
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இந்திய-ஐரோப்பியம்
  இந்திய-ஈரானியம்
   இந்திய-ஆரியம்
    மேற்கு ஹிந்தி
     கரிபோலி 
எழுத்து முறை: தேவநாகரி
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: hi
ஐ.எசு.ஓ 639-2: hin
ISO/FDIS 639-3: hin 

கரிபோலி ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது கடிபோலி எனவும் அழைக்கப்படுவதுண்டு. இதுவே ஹிந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியாகும். மேற்கு உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளுக்குச் சொந்தமான இம்மொழி, உருது மொழியின் கிளை மொழியும் கூட. கரிபோலியின் தாயகமான மேற்கு உத்தரப் பிரதேசத்தில், 18 ஆம் நூற்றாண்டுக்கு முன், நாட்டுப்புற, பாமரத்தனமான மொழியே வழங்கிவந்தது. எனினும் இதன் மேற்கிலும், கிழக்கிலும் முறையே டெல்லியிலும், லக்னோவிலும் அதிகாரவர்க்க முஸ்லிம் பண்பாடு நிலவியது. இவர்கள் பாரசீக, துருக்கிய மற்றும் அரபி மொழிகளிலிருந்து பெருமளவுக்குக் கடன்பட்ட ஒரு இலக்கியத்தை ஆதரித்து வந்தனர். இந்தப் பண்பாட்டுக் கலப்புக்கு உட்பட்டே ஹிந்தியின் கரிபோலி கிளைமொழி வளர்ச்சியடைந்தது.

டெல்லியைச் சுற்றியிருந்த பகுதிகள் நீண்ட காலமாகவே வட இந்தியாவின் அதிகார மையமாகத் திகழ்ந்ததால், இயல்பாகவே அப்பகுதிக்குரிய கிளை மொழியான கரிபோலி, நகர்சார் மொழியாகவும், ஹிந்தியின் ஏனைய கிளை மொழிகளிலும் உயர்வானதாகவும் கருதப்படும் நிலை உருவானது. இப்போக்கு 19 ஆம் நூற்றாண்டில் படிப்படியாக உரம் பெற்றுவந்தது. இதற்கு முன் இலக்கியத்துக்குரிய மொழிகளாக இருந்த ஆவாதி, பிராஜ் பாஷா என்பன முக்கியத்துவம் இழந்தன.

விடுதலைக்குப் பின்[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின், ஹிந்தியின் கரிபோலி கிளைமொழி, தெற்கு மற்றும் வட இந்தியப் பகுதிகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைய அரசின் செயற்பாட்டுக்குரிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமஸ்கிருதவயமாக்கம்[தொகு]

1950 இல் இந்தியின் கரிபோலி கிளைமொழி மைய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டபின், அரச ஊக்குவிப்பின் கீழ், அதில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் முக்கியமானது ஹிந்தியின் சமஸ்கிருதவயமாக்கம் ஆகும். இதன் கீழ் ஏராளமான சமஸ்கிருத மொழிச் சொற்கள் கரிபோலியில் அறிமுகப்படுத்தப்பட்டன.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரிபோலி&oldid=1396700" இருந்து மீள்விக்கப்பட்டது