பிராஜ் பாஷா
| பிராஜ் பாஷா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | உத்தரப் பிரதேசம் | |
| பேசுபவர்கள்: | 42,000 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் மேற்கு ஹிந்தி பிராஜ் பாஷா |
|
| எழுத்து முறை: | தேவநாகரி | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | bra | |
| ISO/FDIS 639-3: | bra | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பிரிஜ் பாஷா ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பிராஜ் பாஷா, டைஹாத்தி ஸாபான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, ஹிந்தி மொழிக்கு நெருக்கமானதாகும். இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கொள்ளப்படுவதும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் இதுவே இலக்கிய மொழியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பிராஜ் பூமி என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 42,000 மக்களால் பேசப்படுகிறது. மகாபாரதக் கதையின் படி அக்காலத்தில் இது ஒரு நாடாக இருந்தது.
இன்று பிராஜ் பாஷா, மதுரா, விருந்தாவனம், ஆக்ரா, ஃபிரோசாபாத், ஹத்ராஸ், எத்தா, அலிகர், பரேலி, புலந்த்ஷாகர், பரத்பூர், தவுல்பூர் ஆகிய பகுதிகளில் புழங்கிவருகிறது. மத்திய காலப் பகுதியில் பெரும்பாலான ஹிந்தி இலக்கியம் இப் பகுதியிலேயே உருவானது. தற்காலத்தில், ஹிந்தியின் இன்னொரு கிளைமொழியான கரிபோலி இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது.