மாண்டியா மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்டியா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் கிழக்கில் பெங்களூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன. மாண்டியா இங்குள்ள முக்கியமான நகரம்.
இம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன.