கீழ் சுபன்சிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கீழ் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொது உருவாக்கப்பட்டவை கீழ் மற்றும் மேல் சுபன்சிரி மாவட்டங்கள்...[1]

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக சைரோ நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 10,135 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சைரோ, யாசுளி, பிஸ்தனா, ராகா, கம்பொரிஜோ, மற்றும் டோல்லுங்முக்.இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது .[2]

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நியிசிஸ் மற்றும் அபதனிஸ் இனத்தை சேர்ந்தவர்கள்..

மொழி[தொகு]

திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் அபதனிஸ் மொழி இங்கு சுமார் 24,000 மக்களால் பேசப்பட்டு வருகிறது .[3]

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

இந்த மாவட்டத்தில் நடக்கும் விழாக்களான நியோகும், பூரி-பூட் மற்றும் டிரீ விழா மிகவும் பிரபலமானவை. 1995 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டேல் பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது .[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  2. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
  3. "Apatani: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]