லோஹித் மாவட்டம்
லோஹித் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தெசு நகரம் உள்ளது.[1]
பொருளடக்கம் |
பெயர்க்காரணம் [தொகு]
இந்த மாவட்டத்தில் பாயும் லோஹிட் நதியின் பெயரைக்கொண்டு, இந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது.
அமைப்பு [தொகு]
லோஹித் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சை,டேசு, சௌகம், லேகங்.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[2]
போக்குவரத்து [தொகு]
பல காலமாக பரசுராம குன்று பகுதிக்கு சரியான பாலம் வசதிகள் இல்லாமல் அவதிபட்டு வந்த இந்த மக்களுக்கு, 2004 ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டபட்டதன் மூலம் இகிலக்கு டேசு பகுதி வருடம் முழுவதும் சென்று வரக்கூடிய வசதியை பெற்றது.
மக்கள் [தொகு]
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், கம்டி, டிஓரி, அஹோம்ஸ்,சிங்போ,சக்மா, மற்றும் மிஸ்மி இனத்தை சேர்ந்தவர்கள்..
மொழி [தொகு]
சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் காலோ மொழி இங்கு சுமார் 30,000 மக்களால் பேசப்பட்டு வருகிறது.[3]
சுற்றுலாத் தளங்கள் [தொகு]
1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் கம்லங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
- ↑ "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.