சங்லங் மாவட்டம்
சங்லங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி இதுவே இந்தியாவில் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.[1]இந்த மாவட்டம் அருகில் உள்ள திராப் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 14, 1987 ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்டது.[2]
பொருளடக்கம் |
[தொகு] அமைப்பு
இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது [3]இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. சாங்லோங்,மியாஓ,ஜெய்ராம்பூர்,போர்தும்சா,கிமியாங்,நம்டோக்,யத்டம்,கார்சங்,விஜயோநகர்,நம்போங்,மன்மாஒ,ரீமா புதக்,போர்தும்சா,டியூன்
[தொகு] மக்கள்
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான துட்சா, தங்கசா, நோக்டே,சிங்போ மற்றும் லிசு இனத்தை சேர்ந்தவர்களே.திபெத் நாட்டில் இருந்து அகதிகளாக வந்த மக்களும் இங்கு வசிக்கின்றனர்.[4] [5]
[தொகு] மொழி
சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 30,000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர்.[6]
[தொகு] சுற்றுலாத் தளங்கள்
நம்தபா புலிகள் சரணாலயம் இந்த மாவட்டத்தின் மியாஓ நகரத்தில் அமைந்துள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
- ↑ Tibetans in Miao Elect Settlement Officer
- ↑ Choepheling Tibetan Settlement, Miao, Arunachal Pradesh, India
- ↑ "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.