கிழக்கு சியாங் மாவட்டம்
கிழக்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.
பொருளடக்கம் |
அமைப்பு [தொகு]
இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1] இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[2]
மக்கள் [தொகு]
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.
மொழி [தொகு]
சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர். [3]
அதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது. [4]
சுற்றுலாத் தளங்கள் [தொகு]
1978 ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் டி' எரிங் நினைவு சரணாலயம் திறக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
- ↑ "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
- ↑ "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.