மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். [1] இந்த மாவட்டம் மிகவும் பெரிய இடமாக இருந்தாலும், இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் மாவட்டமாகும்.[2][3]
பொருளடக்கம் |
[தொகு] அமைப்பு
மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் அருகில் உள்ள லோஹித் மாநிலத்தில் இருந்து பிரித்து, 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்..[4] இந்த நகரம் டிபாங் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக அனினி நகரம் உள்ளது. இந்த மாவட்டம் ஒரு சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது. [5]
[தொகு] மக்கள்
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி மற்றும் இடி இனத்தை சேர்ந்தவர்கள்.
[தொகு] மொழி
சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர்.[6]
[தொகு] சுற்றுலாத் தளங்கள்
1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டிபாங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது .[7]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ National Portal of India : Know India : Districts of India
- ↑ Mission Anini
- ↑ "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
- ↑ "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.