பத்தனம்திட்டா மாவட்டம்
| பத்தனம்தித்தா | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | பத்தனம்தித்தா |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,34,016 (2001[update]) • 574 /km2 (1 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| ISO 3166-2 | IN-KL- |
பத்தனம்திட்டா மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் 1982ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் உருவாக்கப்பட்டது. பத்தனம்திட்டா இதன் தலைநகரம்.
பத்தனம்திட்டா ஒரு நிலஞ்சூழ் மாவட்டம். இது கேரளத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் இதன் வடக்கிலும் ஆலப்புழா மாவட்டம் மேற்கிலும் கொல்லம் மாவட்டம் தெற்கிலும் தமிழ் நாடு கிழக்கிலும் இதன் எல்லைகளாகும்.
இம்மாவட்டத்திலுள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாவன: பத்தனம்தித்தா, திருவல்லா, சபரிமலை, பந்தளம், அடூர். மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி காடுகளாகும். வேளாண்மையே இம்மாவட்டத்தின் முதன்மைத் தொழில். தென்னை, இரப்பர், தேயிலை, நெல், மிளகு போன்றவை மிகுதியாகப் பயிர்செய்யப்படுகின்றன.
பத்தனம்திட்டா இந்தியாவிலேயே போலியோ இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுள் முதல் மாவட்டமாகும்.
|
||||||||||||||||
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found