பாலக்காடு மாவட்டம்
| பாலக்காடு | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | பாலக்காடு |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மாவட்ட ஆட்சியர் | எம். சி. மோகன்தாசு. |
| மக்கள் தொகை • அடர்த்தி |
26,17,072 (2001[update]) • 565 /km2 (1 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 4,629 square kilometres (1 ச மைல்) |
| ISO 3166-2 | IN-KL-09-XXXX |
| இணையதளம் | palakkad.nic.in |
பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும்.
பெயர்க்காரணம் [தொகு]
முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.
வரலாறு [தொகு]
பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||