கயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கயை
—  நகரம்  —
கயை
இருப்பிடம்: கயை
, பீகார் , இந்தியா
அமைவிடம் 24°45′N 85°01′E / 24.75°N 85.01°E / 24.75; 85.01ஆள்கூறுகள்: 24°45′N 85°01′E / 24.75°N 85.01°E / 24.75; 85.01
நாடு  இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டம் கயை
ஆளுநர் டி.ஒய்.பட்டீல்

[1]

முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சி[2]
கோட்ட ஆணையர் விவேக் குமார் சிங் (இஆப)
மக்கள் தொகை 3,94,560 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் gaya.bih.nic.in


கயை (Gaya, இந்தி: गया) இந்திய மாநிலம் பீகாரில் உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது கயை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

கயை மாநிலத்தலைநகர் பட்னாவிலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. இராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.

வரலாறு[தொகு]

தொன்மை வரலாறு[தொகு]

கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு கௌதம புத்தரின் பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 11 கிமீ தொலைவில் போத் கயையில் உள்ளது. அதுமுதல் கயை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ராஜ்கிர், நளாந்தா, வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் மௌரியப் பேரரசு காலத்தில் மேலும் வலுப்பெற்றன.

அண்மைக்கால வரலாறு[தொகு]

நகரத்தில் Gaya, in about 1810 AD, பூசாரிகள் வசித்த பகுதி கயை என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி இலாகாபாத் என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக சாகேப்கஞ்ச் என அழைக்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்திலும் கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922ஆம் ஆண்டு காங்கிரசின் அனைத்திந்திய மாநாடு தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் இங்குதான் கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கயை&oldid=1372886" இருந்து மீள்விக்கப்பட்டது