சம்பா மாவட்டம்
| சம்பா மாவட்டம் |
|
|---|---|
|
சம்பாமாவட்டத்தின் இடஅமைவு இமாச்சலப் பிரதேசம் |
|
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
| தலைமையகம் | சம்பா, இமாசலப் பிரதேசம் |
| பரப்பு | 6,528 கிமீ2 (2 ச மைல்) |
| மக்கட்தொகை | 393,386 (2001) |
| மக்கள் அடர்த்தி | 60.26 /km2 (156.1 /sq mi) |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சம்பா இமாசலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.
பொருளடக்கம் |
பொருளாதாரம்[தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[1] இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 கணக்கெடுப்பின்படி சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை 518,844.[2] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.[2] சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 80 /சதுர கிலோமீட்டர் (210 /sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58 %.[2] சம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 73.19 %.[2]
மொழிகள்[தொகு]
குறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "Cape Verde 516,100 July 2011 est."
- ↑ "Bhattiyali: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
|
|||||