குலு

ஆள்கூறுகள்: 31°57′N 77°07′E / 31.95°N 77.11°E / 31.95; 77.11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kullu
குலு
நகரம்
Kullu
Kullu
Kullu is located in இமாச்சலப் பிரதேசம்
Kullu
Kullu
Location in Himachal Pradesh, India
Kullu is located in இந்தியா
Kullu
Kullu
Kullu (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°57′N 77°07′E / 31.95°N 77.11°E / 31.95; 77.11
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்குல்லு
அரசு
 • வகைDemocratic
ஏற்றம்1,279 m (4,196 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,536
 • தரவரிசை11th in HP
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்175101
தொலைபேசி குறியீடு01902
வாகனப் பதிவுHP HP 34 HP 66
பாலின விகிதம்1.17 (1000/852) /
இணையதளம்www.hpkullu.nic.in

குலு (Kullu) என்பது இந்திய மாநிலமான, இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் ஒரு நகரமாகும். இது பூந்தார் வானூர்தி நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் குலு பள்ளத்தாக்கில் பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

குலு பள்ளத்தாக்கு என்பது மணாலி மற்றும் லர்ஜி இடையே பியாஸ் ஆற்றால் உருவாக்கப்பட்ட ஒரு பரந்த திறந்த பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கானாது அதில் அமைந்துள்ள கோயில்கள் மற்றும் பைன், தேவதாரு காடுகள் மற்றும் பரந்த ஆப்பிள் தோப்புகள் நிரம்பிய மலைகளுக்கு பெயர் பெற்றது. பியாஸ் குண்ட்டில் [1] இருந்து உருவாகும் பியாஸ் ஆற்றின் போக்கு, வரிசையாக அற்புதமான, தேவதாரு காடுகளால் மூடப்பட்டும், உயர்ந்த பைன் மரக்காடுகளும் கொண்டதாக, இந்த அற்புதமான நகரத்தின் வெளிப்பகுதி உள்ளது. குலு பள்ளத்தாக்கு இந்தியாவின் தலைநகரில் இருந்து 497 கிமீ தொலைவில் வட இந்தியாவில் அமைந்துள்ள பிர் பஞ்சால், கீழ் இமயமலை மற்றும் பெரிய இமயமலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

குலு பள்ளத்தாக்கு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளானது இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களின் பண்டைய இந்து இலக்கியப் படைப்புகளுக்கு முந்தையவையாக உள்ளன. வேத காலத்தில் " ஜனபதங்கள் " என்று அழைக்கப்பட்ட பல சிறிய குடியரசுகள் இருந்தன. அவை பின்னர் நந்த பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, பாலப் பேரரசு, கார்கோடப் பேரரசு ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டன. மன்னர் ஹர்ஷவர்த்தனரின் மேலாதிக்கத்திற்குப் பிறகு, இப்பகுதி மீண்டும் சில ராஜபுத்திர சமஸ்தானங்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் தலைமையில் பல உள்ளூர் சக்திகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த சமஸ்தானங்கள் பின்னர் மராட்டியப் பேரரசு மற்றும் சீக்கியப் பேரரசால் கைப்பற்றப்பட்டன. [2]

குலு என்ற பெயரானது "குளந்த் பீத்" என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது "வாழக்கூடிய உலகின் முடிவு". தொன்மங்களின்படி, பெரும் வெள்ளத்தின் போது, மனு இந்த பள்ளத்தாக்கிற்கு வந்தார், ஆனால் அவரால் ரோஹ்தாங் கணவாயைக் கடக்க முடியவில்லை. அவர் கடைசியாக கண்டறிந்த குடியேற்றத்திற்கு குளந்த் பீத் என்று பெயரிட்டார். மேலும் இப்போது மணாலி (மனுவின் இடம்) நகரமாக மாறியுள்ள இடத்தில் குடியேறி தியானிக்க தேர்வு செய்தார். பின்னர் இதன் பெயர் " குலூட் " என்று மாறியது; இறுதியாக குலு அல்லது குளு என்ற தற்போதைய பெயரால் அழைக்கப்படுகிறது.

பௌத்த பயணியும் துறவியுமான சுவான்சாங் கிபு 634 அல்லது 635 இல் குலு பள்ளத்தாக்குக்கு பயணம் மேற்கொண்டார். முழுவதுமாக மலைகளால் சூழப்பட்ட வளமான பகுதி என்று அவர் விவரித்துள்ளர். அதில் மௌரியப் பேரரசர் அசோகர் கட்டிய ஸ்தூபி இருந்தது. இது புத்தர் உள்ளூர் மக்களுக்கு உபதேசம் செய்து பௌத்த சமயத்துக்கு அவர்களை மாற்றம் செய்த இடத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்தூபியானது முகலாய ஆட்சியாளரால் எடுத்துச் செல்லப்பட்டு தில்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ( அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் என 27 ஆகஸ்ட் 2019 அன்று பெயர் மாற்றப்பட்டது) வைக்கபட்டது. குலுவில் சுமார் 1,000 துறவிகள் கொண்ட இருபது புத்த மடாலயங்கள் இருந்தன. அவர்களில் பெரும்பாலோர் மகாயான பௌத்தர்கள். இங்கு பதினைந்து இந்துக் கோயில்களும் இருந்தன. இரு சமயத்தினரும் ஒன்றாகக் கலந்து வாழ்ந்தனர். பௌத்த மற்றும் இந்து மருத்துவர்கள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு அருகில் தியானம் செய்யும் குகைகள் இருந்தன. இப்பகுயில் தங்கம், வெள்ளி, செஞ்செப்பு, படிக வில்லைகள், மணியுலோகம் ஆகியவ உற்பத்தி செய்யபட்டதாக கூறப்படுகிறது. [3]

இந்திய விடுதலைக்குப் பிறகுதான் குலுவுக்கு மோட்டார் வசதி கிடைத்தது. இருப்பினும், பல நூற்றாண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாதலால், அதன் பாரம்பரிய அழகு கணிசமான அளவில் நிலைத்திருக்கிறது. குலு பள்ளத்தாக்கு மற்றும் லாஹவுல் வழியாகச் செல்லும் சாலையானது, வட இந்திய சமவெளிகளையும் லடாக்கில் உள்ள லே வரையிலான அனைத்து பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

நிலவியல்[தொகு]

குலு நகரம் பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

குலு நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,278 மீ (4,193 அடி) உயரத்தில் உள்ளது . இது பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. குலுவின் கிழக்கில் பிஜிலி மகாதேவ், மவுன்டி நாக், புயீட் ஆகிய கிராம-கோயில்களைக் கொண்ட ஒரு மலை முகடு உள்ளது. குலுவின் தெற்கில் பூந்தர் நகரம், அவுட் மற்றும் மண்டி (மண்டி மாவட்டம்) அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக குலுவை சிம்லாவிலிருந்து சிராஜ் பள்ளத்தாக்கு வழியாக அல்லது மேற்கில் ஜோகிந்தர்நகர் மற்றும் காங்க்ரா செல்லும் பாதைகள் வழியாக அணுகலாம். வடக்கே மணாலி நகரம் உள்ளது. இதற்கு ரோட்டாங் கணவாய் வழியாக செல்லவேண்டும் (இப்போது அடல் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்). மணாலியின் வடக்கே உள்ள லீவார்டு மற்றும் மிகவும் வறண்ட பீடபூமிகளுக்குச் செல்ல, காற்றோட்டமான மலைத்தொடர்களின் பக்கமாக ஏறிச் செல்லும்போது, காலநிலையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம். ஆனால் மணாலியின் வடக்கே உள்ள செங்குத்தான மலைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை.

இந்தப் பள்ளத்தாக்கு பல்வேறான பல்லுயிர் தன்மை கொண்டது. இங்கே இமயமலை வரையாடு, மேற்கத்திய டிராகோபான், மோனல், இமயமலை பழுப்புக் கரடி, பனிச்சிறுத்தை போன்ற அரிய விலங்குள் உள்ளன. பெரிய இமாலய தேசியப் பூங்காவும் (GHNP) இங்கு (பஞ்சருக்கு அருகில்) அமைந்துள்ளது. இந்த பூங்கா 1984 இல் அமைக்கப்பட்டது. இது 1,171 km2 (452 sq mi) பரப்பளவில் பரவியுள்ளது இது 1,500 முதல் 6,000 m (4,900 முதல் 19,700 அடி) உயரத்தில் உள்ளது . இந்த இமயமலைப் பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதற்காக, கோகான் சரணாலயம், கைஸ் சரணாலயம், தீர்த்தன் சரணாலயம், கனவார் சரணாலயம், ரூபி பாபா சரணாலயம், பெரிய இமயமலை தேசிய பூங்கா, வான் விஹார் மணாலி போன்ற பல இடங்கள் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குலு பள்ளத்தாக்கில் இலையுதிர் காலம்

கோடை காலத்தில் குலு பள்ளத்தாக்கில் வெப்பநிலை சுமார் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குளிர்காலத்தில் திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் குறைந்த வெப்பநிலை −4 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை (25 முதல் 68 டிகிரி பாரன்ஹீட் வரை) வரை இருக்கும். உயரமான பகுதிகளில் அதிக பனிப்பொழிவுவும், முக்கிய நகரத்தில் மிக லேசான பனிப்பொழிவுவும் இருக்கும். குளிர்காலத்தில் மாலையும் காலையும் குளிராக இருக்கும். கோடையில் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலை மே முதல் ஆகஸ்ட் வரை 24 முதல் 34 °C (75 முதல் 93 °F) வரை இருக்கும். சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் பருவமழை காரணமாக மழை பெய்யும், சுமார் 150 mm (5.9 அங்) என்ற அளவில் மாதாந்திர மழை இருக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காலநிலை இதமாக இருக்கும்

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[4] குலுவின் மக்கள் தொகை 437,903 ஆகும். இதில் ஆண்கள் 225,452 ஆகவும், பெண்கள் 212,451 ஆகவும் உள்ளனர். குலுவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள் என்ற வீத்ததில் உள்ளது. இது தேசிய பாலின விகிதத்தை விட அதிகம் ஆகும். குலுவின் சராசரி கல்வியறிவு விகிதம் 79.40% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 87.39% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.91% ஆகவும் உள்ளது. மக்கள் குல்லூய் மொழி பேசுகின்றனர்.

நிர்வாகம்[தொகு]

குலு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக குலு நகரம் உள்ளது. இங்கு துணை ஆணையர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலுவலகங்களும், மாவட்ட நீதிமன்றம் போன்றவை உள்ளன. இது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட தொகுதியாகும். குலு நிர்வாகம் முன்னர் சுல்தான் பூரிலிருந்தது (முன்னாள் தலைநகர்). பின்னர் குலு நகரத்திற்கு மாற்றப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

வானூர்தி[தொகு]

குலுவுக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் (IATA குறியீடு KUU) குலு நகருக்கு தெற்கே சுமார் 10 கிமீ (6.2 மைல்) தொலைவில் பார்வதி மற்றும் பியாஸ் ஆறுகள் (அட்சரேகை 31.8763 N மற்றும் தீர்க்கரேகை 77.1541 E) சங்கமிக்கும் இடத்தில் NH21 இல் அமைந்துள்ள பூந்தர் நகரில் உள்ளது. இந்த விமான நிலையம் குலு-மனாலி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் சில தனியார் வானூர்தி நிறுவனங்கள் வழக்கமான வானூர்தி போக்குவரத்தை வழங்குகின்றன. இமாலயன் புல்ஸ் டெக்கான் சார்ட்டர்ஸ் உடன் இணைந்து குலு-சண்டிகர்-குலு செக்டாரில் 2 ஏப்ரல் 2014 முதல் எட்டு இருக்கைகள் கொண்ட வானூர்திகளில் தினமும் இரண்டு முதல் மூன்று முறை வரையில் வானூர்தி போக்குவரத்தைத் தொடங்கியது. இதற்கான கட்டணங்கள் பொதுவாக மிக அதிகமானவை.

அருகில் உள்ள பெரிய வானூர்தி நிலையம் சண்டிகர் வானூர்தி நிலையம் ஆகும்.

சாலை[தொகு]

குலுவை தில்லியிலிருந்து சண்டிகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை NH 1 வழியாகவும், அங்கிருந்து பிலாசுபூர், சுந்தர்நகர் மற்றும் மண்டி நகரங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 21 மூலமாகவும் அடையலாம். தில்லியிலிருந்து சண்டிகருக்கு பேருந்து மூலம் செல்லும் சாலை தூரம் 260 km (160 mi) ஆகும். மேலும் சண்டிகரில் இருந்து குலு வரை 252 km (157 mi) ஆகும் ; தில்லியில் இருந்து குலுவிற்கு ஆகும் மொத்த தூரம் சுமார் 512 km (318 mi) ஆகும் கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

தொடருந்து

குலுவில் இது வரை தொடருந்து பாதைகள் அமைக்கப்படவில்லை. ஆனால் தண்டவாறங்கள் அமைப்பதற்காக நிலத்தை அரசு அளவீடு செய்துள்ளது. இருப்பினும் சிறிது காலம் ஆகலாம்.

ஈர்ப்புகள்[தொகு]

குலுவில் உள்ள பியாஸ் ஆற்று பள்ளத்தாக்கிலிருந்து இமயமலையின் காட்சி.
பார்வதி பள்ளத்தாக்கு
ஹிடிம்பா தேவி கோயில் ஹடிம்பா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது

[ குலு மாவட்டத்தில் உள்ள இடங்கள் பகுதியைப் பார்க்கவும் . ]

குறிப்புகள்[தொகு]

  1. Jutta., Mattausch (2016). Reise Know-How Ladakh und Zanskar. Reise Know-How Verlag Peter Rump. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8317-4694-1. இணையக் கணினி நூலக மையம்:964402368. http://worldcat.org/oclc/964402368. 
  2. Verma 1995, ப. 28–35, Historical Perspective.
  3. Watters (1904-1905), pp. 298, 335.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 சூன் 2004. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு&oldid=3708819" இலிருந்து மீள்விக்கப்பட்டது