கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்மௌர் இமாசலப் பிரதேசம், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இது மிக அதிக மலைகளையும் கிராமப்புறங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் 90% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். இம்மாவட்டம் நஹன்(இதன் தலைநகரம்) மற்றும் சுகெட்டி ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது. சுகெட்டி நகரில் உள்ள ஷிவாலிக் புதைபடிவ பூங்காவில் 85 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் நஹன், ரேணுகா, ஷில்லை, ரஜ்கர்ஹ், பச்ஹாத், பொன்ட சாஹிப் ஆகிய ஆறு வட்டங்கள் உள்ளன. இம்மாவட்ட பொருளாதாரம் பெருமளவு விவசாயத்தையே சார்ந்துள்ளது. இமாவட்ட மக்கள் உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை அதிகம் விளைவிக்கின்றனர்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சிர்மௌர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 530,164.[1] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 542வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 188 /சதுர கிலோமீட்டர் (490 /sq mi).[1] மேலும் சிர்மௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.61%.[1]சிர்மௌர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சிர்மௌர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 79.98%.[1]
மேற்கோள்கள் [தொகு]
|
இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள் |
|
|
|
|