பிகானேர்
| பிகானேர் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | இராச்சசுத்தான் |
| மாவட்டம் | பிகானேர் |
| ஆளுநர் | சிவராஜ் பாட்டீல் |
| முதலமைச்சர் | அசோக் கேலாட் |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,23,982 (2008[update]) • 1,960 /km2 (5 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
270 கிமீ2 (104 சதுர மைல்) • 242 மீட்டர்கள்s (794 அடி) |
|
குறியீடுகள்
|
|
பிகானேர் (Bikaner, இராசத்தானி மொழி:बिकाणो) இந்திய மாநிலம் இராசத்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒர் நகரமாகும். பிகானேர் அதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. முன்னதாக பிகானேர் அரசாட்சியின் தலைநகரமாகவும் விளங்கியது. மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து வடமேற்கே 330 kilometres (205 மை) தொலைவில் அமைந்துள்ளது. 1486ஆம் ஆண்டு இதனை நிறுவிய ராவ் பிகாவின் நினைவில் இந்நகர் பெயரிடப்பட்டுள்ளது. [1][2][3] இன்று பெரும் வளர்ச்சியைக் கண்டு இராசத்தானின் நான்காவது பெரும் நகரமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும் 1987ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிராகின்றன. கம்பளித் தயாரிப்பும் ஜிப்சம், பாரிசுச் சாந்து மற்றும் பெண்டோனைட் அகழ்ந்தெடுத்தலும் பிற தொழில்களாகும்.
பிகானேர் கார,இனிப்பு வகைகளுக்கு (இந்தியில் நம்கீன்) பெயர்பெற்றது.
மேற்கோள்கள் [தொகு]
- Patnaik, Naveen. (1990). A Desert Kingdom: The Rajputs of Bikaner. George Weidenfeld & Nicolson Ltd., London.
- ↑ http://www.bkn.co.in/History.php
- ↑ http://www.prachinamuseum.org/bikaner.htm
- ↑ http://www.travelgrove.com/travel-guides/India/Bikaner-History-c868406.html
வெளியிணைப்புகள் [தொகு]
Bikaner பயண வழிகாட்டி விக்கிப்பயணம்|விக்கிப்பயணத்திலிருந்து- District Government Site
- www.realbikaner.com/
- bikaner.nic.in