பில்வாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10 ஆம் எண் பில்வாரா மாவட்டம் ஆகும்

பில்வாரா (Bhilwara) மாவட்டம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். பில்வாரா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.

அமைப்பு[தொகு]

இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,455 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டம் கைத்தறி ஆலைகளுக்குப் பெயர் பெற்றது.மேலும் இம்மாவட்டம் 7 துணை மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 24,10,459 பேர் வசிக்கின்றனர்.[1] இது குவைத் நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] அல்லது அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 230 பேர் எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.71% ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Kuwait 2,595,62 {{cite web}}: line feed character in |quote= at position 7 (help)
  3. "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. New Mexico - 2,059,179

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்வாரா_மாவட்டம்&oldid=3890685" இலிருந்து மீள்விக்கப்பட்டது