விதிஷா

ஆள்கூறுகள்: 23°32′N 77°49′E / 23.53°N 77.82°E / 23.53; 77.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதிஷா
Mathura
சாம்ராட் அசோகர் தொழில்நுட்ப நிறுவனம், விதிஷா
Vidisha
Vidisha
Vidisha
Vidisha
ஆள்கூறுகள்: 23°32′N 77°49′E / 23.53°N 77.82°E / 23.53; 77.82
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்விதிஷா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி

விதிஷா நகரம், இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பேட்வா ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம் விதிஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மாநிலத் தலைநகரான போபாலிருந்து 54 கி மீ தொலைவில் உள்ளது.


மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விதிஷா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 155,951 ஆகும். அதில் ஆண்கள் 81,488; பெண்கள் 74,463 ஆக உள்ளனர். விதிஷா நகரத்தில் இந்துக்கள் 137,373 (88.09 %); இசுலாமியர்கள் 10,089 (6.47 %); சமனர்கள் 7,376 (4.73 %) மற்றும் பிற மக்கள் 1.,113 (0.72%) ஆக உள்ளனர்.[1]

வரலாற்று இடங்களும், நினைவுச் சின்னங்களும்[தொகு]

ஹேலியோடோரஸ் தூண்

இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில் இருந்த, இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் என்பவரால், கி மு 113-இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்ட தூண் ஆகும். கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.[2]

வரலாறு[தொகு]

கி மு ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சுங்கப் பேரரசு, சாதவாகனப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் காலத்தில் விதிஷா நகரம் பெரும் வணிக மையமாக விளங்கியது. விதிஷா நகரத்திலிருந்து 9 கி மீ தொலைவில் பௌத்த தலமான சாஞ்சி உள்ளது. அசோகர், இளவரசராக இருந்த போது விதிஷா பகுதியின் ஆளுநராக இருந்தவர்.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

போக்குவரத்து வசதிகள்[தொகு]

விதிஷா தொடருந்து நிலையம்
சித்தேஸ்வரி கோயில், விதிஷா தொடருந்து நிலையப் பகுதி

தில்லிசென்னை, தில்லி – மும்பை இருப்புப் பாதை வழித் தடத்தில் விதிஷா நகரம் அமைந்துள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vidisha City Population 2011
  2. Hermann Kulke and Dietmar Rothermund (2004). A History of India. Routledge. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-32920-5. https://books.google.ca/books?id=RoW9GuFJ9GIC&lpg=PA73&pg=PA73. 
  3. "10 things to know about Noble Prize winner Kailash Satyarthi". Zee News.
  4. Vidhisha Railway Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிஷா&oldid=3437232" இலிருந்து மீள்விக்கப்பட்டது