குருச்சேத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருச்சேத்திரம்
कुरुक्षेत्र
ਕੁਰੂਕਸ਼ੇਤਰ
நகராட்சி
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
குருச்சேத்திரம் is located in Haryana
குருச்சேத்திரம்
குருச்சேத்திரம்
ஆள்கூறுகள்: 29°57′57″N 76°50′13″E / 29.965717°N 76.837006°E / 29.965717; 76.837006ஆள்கூறுகள்: 29°57′57″N 76°50′13″E / 29.965717°N 76.837006°E / 29.965717; 76.837006
நாடு இந்தியா
மாநிலம் அரியானா
பரப்பு
 • மொத்தம் 1,530
மக்கள்
 • மொத்தம் 9
 • அடர்த்தி 630
Languages
 • Official Hindi, Punjabi
நேர வலயம் IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண் 136118
தொலைபேசி குறியீட்டு எண் 91-1744
வாகனக் குறியீடு HR 07X XXXX
இணையத்தளம் kurukshetra.nic.in
[1]

குருச்சேத்திரம் இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation (இந்தி: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருசேத்திரத்தின் வரலாறு[தொகு]

வாமண புராணம் பரத குல அரசன் குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. [1] யக்ஞம், தானம், தவம், வாய்மை, தியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் 'குரு'வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

  • பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
  • கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட பெரிய அரங்கம்
  • பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
  • சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
  • பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
  • குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்,
  • கல்பனா சாவ்லா கோளரங்கம்
  • பிர்லா மந்திர்
  • ஒலி ஒளி காட்சியகம்

நிலவியல் அமைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Lost River, by Michel Danino. Penguin India 2010

வெளி இணைப்புகள்[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg Kurukshetra பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து

இதனையும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குருச்சேத்திரம்&oldid=1778390" இருந்து மீள்விக்கப்பட்டது