அருச்சுனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.

அருச்சுனனின் குடும்பம்[தொகு]

அருச்சுனனுக்கு திரெளபதி தவிர சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன் எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.

அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்[தொகு]

 • கௌந்தேயன் (குந்தி)யின் மகன்
 • விஜயன் : (போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன்)
 • தனஞ்செயன் : (அதிக செல்வங்களை போரில் கவர்ந்ததால் தனஞ்செயன்)
 • காண்டீபன் : (காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன்)
 • பார்த்தன் : ((குந்தியின்) இயற்பெயர் பிருதை என்பதால் அருச்சுனனுக்கு பார்த்தன் என்று பெயராயிற்று)
 • சவ்வியசாசி : (ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை வில்லிருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன்)
 • பற்குணன் : (பங்குனி மாதத்தில் பிறந்தவன்)
 • ஜிஷ்ணு : (எதிர்களை வெல்பவன்)
 • கீரிடி : (இந்திரன்) அளித்த கீரிடததை அணிந்தவன்
 • சுவேதவாகனன் : (வெள்ளைக்குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்)
 • குடாகேசன் : (போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன்)
 • வாரணக் கொடியோன் : (அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன்)
 • பராந்தகன் : (எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவன்)

பகவத் கீதை உபதேசம்[தொகு]

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், குருசேத்திரப் போர்க்களத்தில் மனம் தளர்ந்த அருச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து மனத்தெளிவு பெறச் செய்து போரில் ஈடுபடச்செய்தார்.

குருசேத்திரப் போரில் அருச்சுனன் பங்கு[தொகு]

குருச்சேத்திரப் போரில் அருச்சுனன், பகவான் கிருஷ்ணரின் உதவியால் பீஷ்மர், சுசர்மன், ஜயத்திரதன் மற்றும் கர்ணன் போன்ற மாவீரர்களை அழித்ததின் மூலம் கௌரவர் படைகள் தோற்றது.

வெளி இணைப்பு[தொகு]
பஞ்ச பாண்டவர்கள்
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனன்&oldid=1700938" இருந்து மீள்விக்கப்பட்டது