காந்தாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தாரி மகாபாரதக் கதையில் வரும் ஒரு கதைமாந்தர் ஆவார். இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்) மன்னனான சுபலனின் மகள் ஆவார். இவரை குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரன் மணந்து கொண்டார்.
திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே கௌரவர் எனப்பட்டனர்.
இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். தனது மகன்களைக் கொன்ற காரணத்தால் இவர் கிருஷ்ணனை சபித்தார். இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
|
||||||||||||||