யயாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதி மன்னனின் இரண்டாவது மனைவியான சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான ”புரு”வின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர். யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே வடமதுரையை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். யயாதியின் கதை மகாபாரதம், பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

கதையின் உள்ளடக்கம்[தொகு]

அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி - தேவயானி மூலம் யது, துர்வசு என இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. அசுர மன்னன் விருபசேனன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் ஆன சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மித்தைக்கு யயாதி மூலமாக துருயு,அனு மற்றும் புரு எனும் மூன்று குழந்தைகள் பிறக்கின்றனர்.

இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.

பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார்.

பின்னர் மற்ற மகன்களான துர்வாசு,துருயு,அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.

ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவிகளுடன் கானகம் ஏகி நற்றவம் செய்து வீடுபேறு அடைந்தான்.

தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினா.

சர்மித்தையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள்.

குறிப்புதவி நூல்கள்[தொகு]

  • பாகவத புராணம்
  • வியாசரின் மகாபாரதம்

வெளி இணைப்பு[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யயாதி&oldid=1702582" இருந்து மீள்விக்கப்பட்டது