அபிமன்யு (மகாபாரதம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிமன்யு மகாபாரதக் கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார்.
அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.
குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று போர் புரிந்த அபிமன்யு அதில் உயிரிழந்தான்.
|
||||||||||||||