இந்திரன் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திரன்
ஐராவத வாகனத்தில் இந்திரன்
ஐராவத வாகனத்தில் இந்திரன்
தேவர்கள் இற்கு அதிபதி
தேவநாகரி: वरुण
ஆயுதம்: வஜ்ஜிராயுதம்
துணை: இந்திராணி

இந்திரன் என்பவர் இந்துத் தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான கடவுள்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.

பொருளடக்கம்

ரிக் வேதத்தில் [தொகு]

இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வச்சிராயுதத்தைக் (இடி) கையில் ஏந்தியவன். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது.

புராணங்களில் [தொகு]

தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது. புராணங்களில் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே கூறலாம்.

இந்திர விழா [தொகு]

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார். [1]

இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது.[2] இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.[3] தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [4] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.


இவற்றையும் பார்க்கவும் [தொகு]

ஆதாரம் [தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா
  2. சின்னமனூர் செப்பேடுகள்
  3. ஐங்குறுநூறு 62
  4. . (மணிமேகலை. 1: 65-72.)
"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரன்_(இந்து_சமயம்)&oldid=1412057" இருந்து மீள்விக்கப்பட்டது