நாரதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான ஞானிஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளிப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கயுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரனும் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு தம்புராவும் வைத்திருப்பார். நாராயண நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடுஇணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றயுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வல்கயுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.

[தொகு] பிறப்பு:

இவர் பிரம்மாவின் மானசப்புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு சாபத்தால் அடுத்தப்பிரவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணுபுரானங்களை படித்து தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார். விஷ்ணுவின் ஆசிர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெரும் பாக்கியத்தையும் பெற்றார்.

[தொகு] சிறப்பு:

இவர் கந்தர்வகுலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்கள்|மகாஜனங்களில் ஐவரும் ஒருவர். நாரதர் காலங்களையும் லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோகசஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை கலகப்ப்ரியர் என்றும் கூறுவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாரதர்&oldid=1106586" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்