குரு பூர்ணிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குரு பூர்ணிமா
பிற பெயர்(கள்) குரு பூசை
கடைபிடிப்போர் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள்
அனுசரிப்புகள் குரு பூசை
நாள் ஆனி மாதம், பௌர்ணமி நாள்
2014 இல் நாள் சூலை மாதம் 12, சனிக்கிழமை
2015 இல் நாள் சூலை மாதம் 31, வெள்ளிக்கிழமை


குரு பூர்ணிமா ஆனி மாதத்தில் வரும் முதல் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர். [1][2] [3]


இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆனி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

பௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குரு_பூர்ணிமா&oldid=1799885" இருந்து மீள்விக்கப்பட்டது