வேகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
கதி இங்கு வழிமாற்றப்படுகிறது. இதற்கு இணையான திசையன் கணியம் பற்றி அறிய திசைவேகம் கட்டுரையைப் பார்க்க.
|
speed |
|
|
|
|
|
|
|
| பொதுவான குறியீடு(கள்): | v |
| SI அலகு: | மீ / செ |
வேகம் அல்லது கதி (speed) என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் (t) சென்ற தூரம் (d) என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் அலகில் அளக்கப்படும் ஒரு திசையிலிக் கணியம் (scalar quantity) ஆகும். கதிக்கு இணையான திசையன் (vector) கணியம் திசைவேகம் (velocity) ஆகும். வேகமும், திசைவேகமும் ஒரே அலகில் அளக்கப்பட்டாலும், திசைவேகத்துக்கு உள்ள திசை என்னும் கூறு வேகத்துக்கு இல்லை. எனவே கதி அல்லது வேகம் என்பது திசைவேகத்தின் எண்மதிப்பு எனலாம்.
கணிதக் குறியீட்டில் இது பின்வருமாறு எழுதப்படும்.
இங்கே "v" என்பது வேகத்தைக் குறிக்கும்.
அலகுகள் [தொகு]
வேகத்தின் அலகுகள்:
- மீட்டர்/செக்கன் (மீ செ−1 அல்லது மீ/செ), SI அலகில்
- கிலோமீட்டர்/மணி (கிமீ/ம);
- மைல்/மணி (மை/ம/);
- நொட் (கடல் மைல்கள்/மணி, kn அல்லது kt);
- அடி/செக்;
- மாக் எண் (பரிமாணமில்லாதது, வேகம்/ஒலியின் விரைவு;
