ஆதித்தர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆதித்தர்கள் என்பது வேதகாலத்தில் சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் (தேவர்) குழுவைக் குறிக்கின்றது. இந்த அண்டத்தையும், மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என இந்துத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. இந்துக்களின் மிகப் பழைய வேதமான ரிக் வேதம் ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பிராமணங்கள் எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பன்னிரண்டு ஆதித்தர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. மித்திரன்
  2. வருணன்
  3. அர்யமன்
  4. தக்ஷன்
  5. பாகன்
  6. அம்சன்
  7. துவாஸ்திர்
  8. சவிதர்
  9. பூஷண்
  10. சக்ரன்
  11. விவஸ்வத்
  12. விஷ்ணு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தர்கள்&oldid=128249" இருந்து மீள்விக்கப்பட்டது