ஐயப்பன்
| தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
|
|
ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.
பொருளடக்கம் |
ஐயப்பனின் வரலாறு[தொகு]
மகசி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.
பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.
பந்தள அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.
ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.
ஐயனாரிலருந்து ஐயப்பன்[தொகு]
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அய்யனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையை தழுவியது, அய்யனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.
அய்யனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமே.
ஐயப்பனின் வேறு பெயர்கள்[தொகு]
மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா
பந்தளவாசன்
பம்பாவாசன்
ராஜசேகரன்
சபரி
சபரீஷ்
சபரீஷ்வரன்
சபரி கிரீஷ்
சாஸ்தா
வீரமணி
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.
ஐயப்ப வழிபாடு[தொகு]
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - அய்யனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.