தர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) அறம் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

இந்து சமய
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தந்திரம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

பா    தொ

தர்மம் என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.

மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தர்மம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.

மனித ஆத்மா இறைவழியில் நடந்து உயர் ஞானம் பெற்றிட அற வழியில் நடந்திடல் அவசியமானது. அறம் வலியுறுத்தும் திருவள்ளுவர், அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:

சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்
ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)

(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)

(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)

தர்ம வழியில் இருந்து பிறழுதலுக்கு அதர்மம் என்று வழங்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தர்மம்&oldid=1034537" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி