கர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்து மெய்யியல்
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
சம்சாரம்
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு

பா    தொ

இந்து சமயத்தில் கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றால்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.


ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்


என்கிறது யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ 'ஊழ்வினை' என்ற சொல்லை கையாள்கிறார்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்