பேச்சு:கர்மா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்மா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கர்மா என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சொல்[தொகு]

கர்மா என்ற சொல் வடமொழிச்சொல்லின் தவறான உச்சரிப்பு. அதற்குகந்த தமிழ்ச்சொல் 'கருமம்'. தலைப்பை 'கருமம்' என்று மாற்ற வேண்டும். வடமொழிச்சொல்லை வைத்திருக்கவேண்டுமென்றால், 'கர்ம' என்று சொல்லவேண்டும். 'கர்மா' என்ற திரிபு ஆங்கிலேயரால் Karma என்று எழுதப்பட்டு அதை ஹிந்திக்காரர்கள் கர்மா என்று உச்சரித்து (ஏனென்றால் அவர்கள் உச்சரிப்பில் 'கர்ம' என்ற சொல்லே கிடையாது; 'கர்ம' என்று எழுதினால் அதை 'கர்ம்' என்றோ அல்லது 'கரம்' என்றோ தான் சொல்வார்கள் -- ராம (Rama) ராம் ஆனமாதிரி), அதனால் ஆங்கில Karma வட இந்திய உச்சரிப்பில் கர்மா ஆனது!. சரியான வடமொழிச்சொல் கர்ம .--Profvk 04:53, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"கருமமே கண்ணாயிரு" என்று சொல்வார்களே?--Kanags 05:16, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
கர்மா என்ற சொல் இப்போது ஆங்கிலத்திலும் அப்படியே கையாளப்படுகிறது. தமிழிலும் அப்படியே எடுத்துக்கொள்வதில் தவறில்லை என எனக்கு தோன்றுகிறது. கருமம் என்ற சொல் செயல் என்ற பொருளையே தரும். கர்மா என்ற சொல்லே இந்த இடத்தில் சரியாகத் தெரிகிறது. தமிழ் சொல்லான ஊழ் அல்லது ஊழ்வினை என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்தலாம். ஆனால், அது விதி என்கிற தவறான பொருளையும் தரக்கூடும் --Jeevagv 02:18, 14 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
தர்மம் எப்படி தர்மா ஆக முடியாதோ அதுபோல் தான் இதுவும். தலைப்பு கர்மம் அல்லது கருமம் என்றே இருத்தல் வேண்டும். கர்மா என்பது சமஸ்கிருத சொல்லினுடைய ஆங்கில உச்சரிப்பின் தவறான ஒலிபெயர்ப்பு வினோத் ラージャン 13:18, 9 ஏப்ரல் 2008 (UTC)

கர்மா அல்லது கருமம் என்ற வடமொழி சொற்களுக்கு பதிலாக "வினை" அல்லது "வினைப்பயன்" என்ற செந்தமிழ் சொற்களைத் தலைப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. - Appandai Raj

குறிப்பு[தொகு]

பழவினை என்பது இதற்கு முந்தைய பிறவிகளில் நாம் செய்துள்ள நல்ல மற்றும் தீய செயல்களின் பலன்கள் ஆகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கர்மா&oldid=3917440" இலிருந்து மீள்விக்கப்பட்டது