துரோணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துரோணர் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்.

இவர் அசுவத்தாமனுக்குப் பால்வேண்டிப் பசு கேட்கத் தன் பால்ய நண்பன் துருபதனிடம் சென்றார். துருபதன் மறுக்கவே, என் மாணாக்கனைக் கொண்டு உன்னைக் கட்டிக்கொண்டுவரச் செய்வேன்" என சூளுரைத்தார். பின்னர் பீஷ்மர், பாண்டு மக்களுக்கு வில்வித்தை பயிற்றுவித்து, அருச்சுனனைக் கொண்டு துருபதனை கட்டிக் கொணர்ந்தார். பிரம்மனிடம் இருந்து இந்திரனுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் துரியோதனனுக்குத் தந்தவர். ஏகலைவனிடம் அவனது குருதட்சணையாக அவன் கட்டை விரலை பெற்றவர். இவர் பாரதப் போரின் 15ம்நாளில் திட்டத்துய்மன் என்பவனால் கொல்லப்பட்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துரோணர்&oldid=1094887" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்