இந்திரப்பிரஸ்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் விசுவகர்மாவை அனுப்பி இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.
இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது.
|
||||||||||||||