சத்தியவதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இளவயதில் இவருக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவரே வியாசர் ஆவார். இவரை சத்தியவதி யமுனை ஆற்றின் ஒரு தீவில் பெற்றெடுத்தார்.
பின்னர், அத்தினாபுரத்தின் அரசரான சந்தனு சத்தியவதியை மணந்துகொள்ள விரும்பினார். மணம் செய்துகொண்டால் தனது பிள்ளைகள் நாடாள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சத்தியவதி சந்தனுவை மணம் செய்துகொண்டார். சித்திராங்தனும் விசித்திரவீரியனும் இவருடைய மகன்கள் ஆவர்.
|
||||||||||||||