பதின்மூன்றாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாம் நாள் போரில் பாண்டவர் குடும்பத்தில் முதல் பலியான அபிமன்யுவின் மரணம் குறித்தும், சக்கர வியூகம் பற்றியும், அபிமன்யு இறந்ததால் அருச்சுனன் பட்ட துயரம்,அருச்சுனன் செய்த சபதம், போர் விதி முறைகள் மீறப் பட்டது பற்றியும், கூறுகின்றன.[1]

துரோணரின் திட்டம்[தொகு]

பன்னிரண்டாம் நாள் போரில் பீஷ்மரை செயலிழக்கச் செய்த பின் அதுவரை போரில் நுழையாத கர்ணன் இப்போது போரில் குதித்திருந்தான்.பாண்டவர் படையில் சொல்லிக் கொள்ளும்படியான ஒருவன் அருச்சுனன் தான்,அவனை தோற்கடித்தால் கௌரவர் வெற்றி எளிதாகும் என்பதால் கர்ணனின் இலக்கு அருச்சுனனாக இருந்தான்.வில் வித்தையில் அருச்சுனனுக்கு நிகரானவன் கர்ணன் அவனிடமிருந்த தெய்வீக வேல் அது ஒருபோதும் குறி தப்பாது இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டது,தேவேந்திரனால் கர்ணனுக்கு வழங்கப்பட்டது.அருச்சுனனுக்கு எதிராக பயன் படுத்த நினைத்திருந்தான் கர்ணன். இதை ஞானத்தால் அறிந்த கிருட்டிணன் கர்ணனின் பார்வையில் படாதபடி பார்த்துக் கொண்டார். கர்ணனை பார்த்துவிட்டால் கிருட்டிணன் அருச்சுனனை இன்னொரு முனைக்கு அழைத்துச் செல்வார் என்று துரோணர் யூகித்து சக்கர வியூகம் அமைத்து போரிட திட்டம் வகுத்தார். சக்கரவியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும்,வெளியே வரவும் தெரிந்த ஒரே ஆள் அருச்சுனன் மட்டுமே, சக்கரவியூகத்திற்குள் மாட்டிக்கொள்ளும் பாண்டவரை காப்பாற்ற அருச்சுனனை அனுமதிக்கக் கூடாது,இன்று ஒரு பாண்டவரையேனும் பலியிட வேண்டும் என்று முடிவு செய்து தனது படைக்கு சக்கரவியூகம் அமைத்துப் போரிட கட்டளையிட்டார்.[1]

சக்கரவியூகம்[தொகு]

போர் நடக்கும் பல கட்டங்களில் தலைமைத் தளபதி தன் படைகளைப் பல வியூகங்களாக அமைப்பார். ஒவ்வொரு வியூகத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி உண்டு. சில வியூகம் பாதுகாப்புக்கு, சில வியூகம் தாக்குதலுக்கு எனப் பிரிந்து போர்க்களத்தில் செயல்படும். ஒவ்வொரு வியூகத்திற்கும் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு. சில வியூகங்கள் கீழே.

வரிசை எண் வியூகத்தின் பெயர் வியூக அமைப்பு
1 கிரௌஞ்ச வியூகம் கிரௌஞ்ச பறவை
2 மகர வியூகம் மிகப் பெரிய மீன்
3 கூர்ம வியூகம் ஆமை வடிவம்
4 திரிசூல வியூகம் திரிசூலம் போன்ற வடிவம்
5 பத்ம வியூகம் தாமரை வடிவம்
6 சக்கர வியூகம் சக்கரம் போன்ற வடிவம்

சக்கர வியூகத்தில் படை வீரர்கள் எதிரியை வட்டமிட்டு சுற்றி வளைத்து விடுவார்கள், உள் வட்டத்தினுள் சிக்கிய எதிரிகள் எண்ணிக்கை குறைவாயும் தாக்குபவர்கள் மிகுந்தும் இருப்பார்கள்.வெளி வட்டத்திலுள்ள வீரர்கள் சக்கர வியூகத்தினுள் உள்ளவர்களை காப்பாற்றவிடாமல் தடுத்துவிடுவார்கள். இப்படிபட்ட சக்கர வியூகத்தை அமைத்து உக்கிரமாய் போர் நடத்தினார். சக்கர வியூகத்தின் உட்புகவும்,வெளிவரவும் தெரிந்த அருச்சுனனை வெகு தொலைவு அனுப்ப வேண்டுமானால் கர்ணனை அருச்சுனனுடன் போர்புரிய கட்டளையிட்டார்.ஆனால் கிருட்டிணனுக்கு தெரியும் கர்ணனுடன் போர்புரிந்தால் அருச்சுனன் மடிவான். கர்ணனிடம் இந்திரன் கொடுத்த வேல் (பிரம்மாஸ்திரம்) குறி தப்பாமல் அழித்துத் தான் திரும்பும், அதிலிருந்து அருச்சுனனை காக்க வேறு முனைக்கு கொண்டு சென்றார் கிருட்டிணன்.அதனால் பாண்டவ வீரர்கள் பலரும்,(யுதிஸ்டிரன்)தருமனும் சிக்கிக் கொண்டனர்,கௌரவப்படை திடீரென சூழ்ந்து கொண்டதால் இந்த வியூகத்தை உடைத்துக்கொண்டு எப்படி வெளியே வருவது என்று உதவி கேட்டு தருமர் கதறினார்.தருமர் கதறும் சத்தம் அருச்சுனன் கேட்காத வண்ணம் கிருட்டிணன் தனது சங்கை எடுத்து ஊதினார். [1]

அபிமன்யு மரணம்[தொகு]

தருமரின் கதறலைக் கேட்ட அபிமன்யு "நீங்கள் தப்பிக்கும் அளவுக்கு சக்கர வியூகத்தைத் தகர்த்து வழி செய்யத் தெரியும்".தருமர் " அது உனக்கு எப்படித் தெரியும்", "நான் என் தாயின் கருவிலிருக்கும் போது என் தந்தை அவளுக்கு விளக்கியதை கேட்டிருக்கிறேன்,ஆனால் சக்கர வியூகத்தின் உள்ளிருந்து தப்பித்து வெளியே வரத்தெரியாது,ஆகவே நீங்கள் மீண்டும் சீக்கிரமாக வந்து என்னை மீட்க வேண்டும் எச்சரிக்கை" என்றான் அபிமன்யு.ஒப்புக்கொண்டார் தருமர்,சொல்லியபடியே சக்கரவியூகத்தை தகர்த்து வழி செய்து உள்ளே சென்று அபிமன்யு உக்கிரமாய் போர்செய்தான்.வழி கிடைத்தவுடன் தருமர் வெளியேறினார்,ஆனால் துரோணர்,கர்ணன்,துச்சாதனன்,அசுவத்தாமன் ஆகியோர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவர்கள் மீண்டும் சக்கரவியூகத்தை வழியை அடைத்து உள் புகுந்தனர் 16 வயது சிறுவனை போர் விதிகள் அனைத்தையும் மீறி அவனது கைகள்,கால்கள்,தலை என ஒவ்வொன்றாய் துண்டித்து கொன்றனர்.[1]

வெளி இணைப்பு[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK