அலகாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலகாபாத்
அலகாபாத்
இருப்பிடம்: அலகாபாத்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85ஆள்கூறுகள்: 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் அலகாபாத்
ஆளுநர் ராம் நாயக்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மக்கள் தொகை 990 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


72 மீற்றர்கள் (236 ft)

அலகாபாத் (ஆங்கிலம்:Allahabad), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது பிரயாக் என்றும் அறியப்படுகிறது. அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள்.

உத்திர பிரதேச மாநிலத்தின் உயர் நீதி மன்றம் இங்கேயே அமைந்துள்ளது.


புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 990,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 56% ஆண்கள், 44% பெண்கள் ஆவார்கள். அலகாபாத் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலகாபாத் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Allahabad". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
  2. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.

உசாத்துணை[தொகு]

ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்&oldid=1769305" இருந்து மீள்விக்கப்பட்டது