சித்திரக்கூட மாவட்டம்
| சித்திரக்கூடம் மாவட்டம் चित्रकूट |
|
|---|---|
|
சித்திரக்கூடம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | சித்திரக்கூடம் |
| தலைமையகம் | சித்திரக்கூடம் (கார்வி) |
| பரப்பு | 3,205 கிமீ2 (1 ச மைல்) |
| மக்கட்தொகை | 990,626 (2011) |
| மக்களவைத்தொகுதிகள் | சித்திரக்கூட மக்களவைத்தொகுதி |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சித்திரக்கூட மாவட்டம் (இந்தி: चित्रकूट जिला)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சித்திரக்கூட நகரம் ஆகும். இமமாவட்டம் சித்திரக்கூடப் பிரிவின் கீழ் உள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 3,205 கிமீ². 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப்பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் இரண்டாவது மிகவும் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் மகோபா மாவட்டத்திற்கு பிறகு சித்திரக்கூட மாவட்டம் ஆகும்.[1]
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
6 மே 1997 அன்று பந்தா மாவட்டத்திலிருந்து கார்வி மாற்று மவூ வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் முதலில் சத்திரபதி சிவாஜி நகர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் 4 செப்டம்பர் 1998 அற்று சித்திரக்கூட மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பொருளாதாரம் [தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சித்திரக்கூட மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[2] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சித்திரக்கூட மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 990,626.[1] இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 448வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 315 /சதுர கிலோமீட்டர் (820 /sq mi).[1] மேலும் சித்திரக்கூட மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 29.29%.[1]சித்திரக்கூட மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சித்திரக்கூட மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 66.52%.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ 2.0 2.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||