விந்தியாச்சல்

ஆள்கூறுகள்: 25°10′N 82°30′E / 25.167°N 82.500°E / 25.167; 82.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்தியாச்சல்
நகரம்
நாடு India
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மிர்சாபூர் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்245,817
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் மொழிஉருது[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்231307
வாகனப் பதிவுUP-63

விந்தியாச்சல் (Vindhyachal) ஒலிப்பு, வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். மிர்சாபூர்-விந்தியாச்சல் நகராட்சியின் கீழ் விந்தியாச்சல் நகரம் உள்ளது. இந்நகரத்தில் குடிகொண்டுள்ள விந்தியவாசினி அம்மன் கோயில் பெயரால் இந்நகரத்திற்கு விந்தியாச்சல் எனப்பெயராயிற்று. இந்நகரத்தில் கங்கை ஆறு பாய்கிறது.

விந்தியவாசினி கோயில், விந்தியாச்சல் நகரம்
விந்தியவாசினி கோயிலின் உட்புறம்

அமைவிடம்[தொகு]

விந்தியாச்சல் நகரம் வாரணாசியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும்; அலகாபாத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மிர்சாபூர்]]-விந்தியாச்சல் நகராட்சியின் மக்கள் தொகை 2,45,817 ஆகும். அதில் ஆண்கள் 1,31,534 மற்றும் பெண்கள் 1,14,283 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,619 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.85% ஆகவுள்ளது. [2]

இரயில் நிலையம்[தொகு]

விந்தியாச்சல் இரயில் நிலையம் [3]இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  3. Vindhyachal railway station


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தியாச்சல்&oldid=3538914" இலிருந்து மீள்விக்கப்பட்டது