முசல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசல்பூர்
Mushalpur

মুছলপুৰ
நகரம்
நாடு India
மாநிலம்அசாம்
மாவட்டம்பாக்சா
ஏற்றம்52 m (171 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமி போடோ
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->781372
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS

முசல்பூர் (ஆங்கிலம்:Mushalpur, அசாமி: মুছলপুৰ) இந்தியாவின் அசாம் மாநிலம், பாக்சா மாவட்டத்தின் தலைமையிடமாகும்[1].

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முசல்பூரின் மக்கள் தொகை 795 நபர்கள் ஆகும். இவ்வெண்னிக்கையில் 429 நபர்கள் ஆண்களாகவும் 366 நபர்கள் பெண்களாகவும் இருந்தனர். 0 முதல் 6 வயதுக்கு உட்பட்ட 69 குழந்தைகள் இங்கு இருந்தனர். நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் இது 8.68% ஆகும். முசல்பூரின் பாலினவிகிதச் சராசரி 1000 ஆண்களுக்கு 853 பெண்களாக இருந்தது. ஒட்டு மொத்த அசாம் மாநிலத்தின் பாலினவிகித சராசரி 958 பெண்களாகும். அதேவேளையில் குழந்தைகளின் பாலினச் சராசரி 1000 சிறுவர்களுக்கு 1029 சிறுமிகள் இருந்தனர். அசாம் மாநிலத்தின் ஒட்டுமொத்த சிறுவர் பாலின விகித சராசரியான 962 என்பதை விட இது அதிகமாகும். முசல்பூரின் எழுத்தறிவு சதவீதம் 73.69% ஆக இருந்தது, இது அசாம் மாநிலத்தின் எழுத்தறிவு சராசரியான 72.19% என்பதைவிட அதிகமாகும். எழுத்தறிவு பெற்ற ஆண்கள் சதவீதம் 82.53% ஆகவும் பெண்களின் எழுத்தறிவு 63.14% ஆகவும் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Baksa district".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசல்பூர்&oldid=2180774" இலிருந்து மீள்விக்கப்பட்டது