தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
இக்கட்டுரை தொடரின் ஒரு பகுதியாகும் |
தமிழ்நாடு அரசியல் |
---|
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளது. இந்த ஆறு மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள், திருநெல்வேலி, ஈரோடு உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது [1]
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாநகராட்சிகளின் ஆண்டு வரி வருவாய்
[தொகு]- பெருநகர சென்னை மாநகராட்சி - 2891.8 கோடி
- கோயம்புத்தூர் மாநகராட்சி - 998.11 கோடி
- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - 722.86 கோடி
- மதுரை மாநகராட்சி - 432 கோடி
- சேலம் மாநகராட்சி- 235 கோடி
- திருப்பூர் மாநகராட்சி - 234.83 கோடி
- திருநெல்வேலி மாநகராட்சி - 164.42கோடி
- ஈரோடு மாநகராட்சி - 194.23 கோடி
- வேலூர் மாநகராட்சி - 130.71 கோடி
- கடலூர் மாநகராட்சி - 45.38 கோடி
- கரூர் மாநகராட்சி - 82 கோடி
- ஒசூர் மாநகராட்சி - 102.41 கோடி
- தூத்துக்குடி மாநகராட்சி - 115 கோடி
- நாகர்கோயில் மாநகராட்சி - 57.26 கோடி
- காஞ்சிபுரம் மாநகராட்சி - 88.96 கோடி
- சிவகாசி மாநகராட்சி - 41.38 கோடி
- தஞ்சாவூர் மாநகராட்சி - 77.96 கோடி
- கும்பகோணம் மாநகராட்சி - 51.36 கோடி
- திண்டுக்கல் மாநகராட்சி - 50.53 கோடி
- தாம்பரம் மாநகராட்சி - 284.25 கோடி
- ஆவடி மாநகராட்சி - 145.26 கோடி
- புதுக்கோட்டை மாநகராட்சி - 67 கோடி
- காரைக்குடி மாநகராட்சி - 57.5 கோடி
- திருவண்ணாமலை மாநகராட்சி
- நாமக்கல் மாநகராட்சி
இதில் முதல் மூன்று இடங்களை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சிகள் கொண்டுள்ளது. இதில் 2021 ஆண்டு அடிப்படையில் மிகக்குறைந்த வரி வருவாயைக் வருவாயைக் கொண்ட மாநகராட்சி சிவகாசி ஆகும். புதிய ஆறு மாநகராட்சிகளின் வரம்பு நகர எல்லைக்கு சமமாக இருக்கும். எனவே பின்னர் நகர வரம்பு விரிவாக்கம், ஆண்டு வருமானம் அதிக உயரும்.
மாநகராட்சிகளின் பட்டியல்
[தொகு]வ. எண் | மாநகர் | மாவட்டம் | மாநகராட்சி பெயர் | மக்கள் தொகை (2011)[2] | மக்கள் தொகை அடர்த்தி /கிமீ2 | மாநகராட்சியாக ஆக்கப்பட்ட ஆண்டு | நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கை | மண்டலம் | வார்டுகளின் எண்ணிக்கை | மாநகராட்சி பகுதி /கிமீ2 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சென்னை | சென்னை மாவட்டம் | பெருநகர சென்னை மாநகராட்சி (இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி மற்றும் லண்டனுக்குப் பிறகு, உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சி ஆகும்.) | 71,39,630 | 17,000 | 29 செப்டம்பர் 1688 | 15 |
|
200 | 426 சதுர கி.மீ |
2 | மதுரை | மதுரை மாவட்டம் | மதுரை மாநகராட்சி | 18,38,252 | 12,832 | 01 மே 1971 | 4 |
|
100 | 147.97 சதுர கி.மீ |
3 | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் மாவட்டம் | கோயம்புத்தூர் மாநகராட்சி | 34,58,045 | 9,175 | 01 சூலை 1981 | 5 |
|
100 | 246.75 சதுர கி.மீ |
4 | திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி | 12,22,518 | 7,543 | 01 சூன் 1994 | 5 |
|
100 | 167 சதுர கி.மீ |
5 | சேலம் | சேலம் மாவட்டம் | சேலம் மாநகராட்சி | 10,32,336 | 8,325 | 01 சூன் 1994 | 4 |
|
60 | 124 சதுர கி.மீ |
6 | திருநெல்வேலி | திருநெல்வேலி மாவட்டம் | திருநெல்வேலி மாநகராட்சி | 9,68,874 | 5,127 | 01 சூன் 1994 | 5 |
|
55 | 189.9 சதுர கி.மீ |
7 | திருப்பூர் | திருப்பூர் மாவட்டம் | திருப்பூர் மாநகராட்சி | 9,63,173 | 6,019 | 26 அக்டோபர் 2008 | 4 |
|
60 | 160 சதுர கி.மீ |
8 | ஈரோடு | ஈரோடு மாவட்டம் | ஈரோடு மாநகராட்சி | 5,21,776 | 4,786 | 01 ஆகத்து 2008 | 4 |
|
60 | 109.52 சதுர கி.மீ |
9 | வேலூர் | வேலூர் மாவட்டம் | வேலூர் மாநகராட்சி | 6,87,981 | 7,907 | 01 ஆகத்து 2008 | 4 |
|
60 | 87.915 சதுர கி.மீ |
10 | தூத்துக்குடி | தூத்துக்குடி மாவட்டம் | தூத்துக்குடி மாநகராட்சி | 4,31,628 | 4,550 | 5 ஆகத்து 2008 | 4 |
|
60 | 90.663 சதுர கி.மீ |
11 | தஞ்சாவூர் | தஞ்சாவூர் மாவட்டம் | தஞ்சாவூர் மாநகராட்சி | 3,22,406 | 3,300 | 19 பிப்ரவரி 2014 | 4 |
|
62 | 128.02 சதுர கி.மீ |
12 | திண்டுக்கல் | திண்டுக்கல் மாவட்டம் | திண்டுக்கல் மாநகராட்சி | 2,95,511 | 4,231 | 19 பிப்ரவரி 2014 | 4 |
|
48 | 46.1 சதுர கி.மீ |
13 | நாகர்கோயில் | கன்னியாகுமரி மாவட்டம் | நாகர்கோயில் மாநகராட்சி | 3,45,849 | 5,334 | 14 பிப்ரவரி 2019 | 4 |
|
52 | 49.10 சதுர கி.மீ |
14 | ஓசூர் | கிருஷ்ணகிரி மாவட்டம் | ஓசூர் மாநகராட்சி | 3,45,000 | 4,407 | 14 பிப்ரவரி 2019 | 4 |
|
45 | 72.41 சதுர கி.மீ |
15 | ஆவடி | திருவள்ளூர் மாவட்டம் | ஆவடி மாநகராட்சி | 4,45,996 | 5,323 | 19 சூன் 2019 | 4 |
|
48 | 65 சதுர கி.மீ |
16 | தாம்பரம் | செங்கல்பட்டு மாவட்டம் | தாம்பரம் மாநகராட்சி | 14,27,591 | 10,588 | 4 நவம்பர் 2021[3] | 7 |
|
100 | 126 சதுர கி.மீ |
17 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் மாவட்டம் | காஞ்சிபுரம் மாநகராட்சி | 3,11,598 | 5,887 | 24 ஆகத்து 2021 | 4 |
|
51 | 54.8 சதுர கி.மீ |
18 | கடலூர் | கடலூர் மாவட்டம் | கடலூர் மாநகராட்சி | 2,80,263 | 2,847 | 24 ஆகத்து 2021 | 4 |
|
45 | 82.83சதுர கி.மீ |
19 | கரூர் | கரூர் மாவட்டம் | கரூர் மாநகராட்சி | 3,58,468 | 3,363 | 24 ஆகத்து 2021 | 4 |
|
48 | 103.56 சதுர கி.மீ |
20 | கும்பகோணம் | தஞ்சாவூர் மாவட்டம் | கும்பகோணம் மாநகராட்சி | 2,23,866 | 4,165 | 24 ஆகத்து 2021 | 4 |
|
48 | 48.87 சதுர கி.மீ |
21 | சிவகாசி | விருதுநகர் மாவட்டம் | சிவகாசி மாநகராட்சி | 2,60.047 | 5,348 | 24 ஆகத்து 2021 | 4 |
|
48 | 53.67 சதுர கி.மீ |
22 | காரைக்குடி | சிவகங்கை மாவட்டம் | காரைக்குடி மாநகராட்சி | 2,34,523 | 5,300 | 15 மார்ச் 2024 | NA | NA | NA | 96 சதுர கி.மீ |
23 | நாமக்கல் | நாமக்கல் மாவட்டம் | நாமக்கல் மாநகராட்சி | 1,50,700 | 5,000 | 15 மார்ச் 2024 | NA | NA | NA | 100 சதுர கி.மீ |
24 | புதுக்கோட்டை | புதுக்கோட்டை மாவட்டம் | புதுக்கோட்டை மாநகராட்சி | 2,16,047 | 4,548 | 15 மார்ச் 2024 | NA | NA | NA | 121 சதுர கி.மீ |
25 | திருவண்ணாமலை | திருவண்ணாமலை மாவட்டம் | திருவண்ணாமலை மாநகராட்சி | 1,60,500 | 4,000 | 15 மார்ச் 2024 | NA | NA | NA | 100 சதுர கி.மீ |
இதனையும் காண்க
[தொகு]- தமிழக நகராட்சிகள்
- தமிழகப் பேரூராட்சிகள்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழக மாவட்டங்கள்
- தமிழக வருவாய் வட்டங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ . இந்து தமிழ். இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/1215740-4-new-municipal-corporations-for-tn.html. பார்த்த நாள்: 3 April 2024.
- ↑ S. K. Kulshrestha (16 April 2018). Urban Renewal in India: Theory, Initiatives and Spatial Planning Strategies. SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789352806386. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ தாம்பரம் மாநகராட்சி உதயமானது: அரசிதழில் வெளியீடு